Friday, December 27, 2013

இந்திய வரலாற்றில் மராட்டியர்



Rajeendra

மராட்டிய மன்னர்கள்
ஏகோஜி கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அங்கு முதன்முதலில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். அவர் உட்பட மொத்தம் பதின்மூன்று மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். இவர்களைத்தான் தஞ்சை மராட்டியர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் கி.பி.1676 முதல் 1855 வரை 180 ஆண்டுகள் தஞ்சையில் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் ஏகோஜி, ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, பிரதாப் சிங், துல்ஜாஜி, இரண்டாம் சரபோஜிஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம்.

ஏகோஜி (கி.பி.1676-1684)

இவருக்கு வெங்காஜி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் மராட்டிய போன்ஸ்லே மரபிலே தோன்றிய ஷாஜி போன்ஸ்லே என்பவரின் மகன் ஆவார். ஷாஜி போன்ஸ்லே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராகப் பணியாற்றினார். அக்காலத்தில் இசுலாமிய மன்னர்கள் தங்களுக்கு வெற்றி தேடித் தந்த படைத்தலைவர்களுக்கு, தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உள்ள ஒரு சிறு நிலப்பகுதியை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை ஆட்சி செய்வதற்கு உரிமையாக வழங்கினர். அந்த நிலப்பகுதி ஜாகீர் எனப்பட்டது. ஷாஜி போன்ஸ்லே தென்னிந்தியாவில் படையெடுத்துப் பெற்ற வெற்றிக்கு மகிழ்ந்த பீஜப்பூர் சுல்தான் அவருக்குப் பெங்களூரு பகுதியை ஜாகீராக வழங்கினான்.
ஷாஜி போன்ஸ்லேவுக்கு இரு மனைவியர் இருந்தனர். முதல் மனைவி துர்க்காபாய் ஆவார். இவருக்குக் கி.பி.1630இல் ஏகோஜி பிறந்தார். இரண்டாம் மனைவி ஜிஜாபாய் ஆவார். இவருக்குக் கி.பி. 1629இல் சத்திரபதி சிவாஜி பிறந்தார். சத்திரபதி சிவாஜி தக்காணத்தில் மாபெரும் மராட்டியப் பேரரசை நிறுவி, அதனைக் கி.பி.1674 முதல் 1680 வரை அரசாண்டவர் ஆவார்.
ஏகோஜி தன் தந்தையைப் போலவே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராக இருந்தார். கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார். தன் தந்தை ஷாஜியின் கட்டளைப்படி ரகுநாத் பந்த்என்பவரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டார். இருப்பினும் சில நாட்களில் ஏகோஜியிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுநாத் பந்த் சிவாஜியிடம் சென்று அவர்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினார்.
ஏகோஜி அரச தந்திரமும், ஆட்சித் திறனும் மிக்கவர். மாபெரும் வீரராகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் அவர் தனது ஆட்சியின் முற்பகுதியில் தன்னுடைய தமையனார் சிவாஜியின் தொல்லைக்கு உட்பட வேண்டியவராகவே இருந்தார்.

ஏகோஜியும் சிவாஜியும்
சத்திரபதி சிவாஜி தக்காணப் பீடபூமியில் ஆங்காங்கு நடந்துவரும்இசுலாமியர் ஆட்சியை ஒழித்து, இந்துப் பேரரசு ஒன்றை நிறுவப் பெரிதும் பாடுபட்டவர் ஆவார். இவர் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்த மராட்டிய நாட்டை மீட்டு, கி.பி. 1674இல் அந்நாட்டின் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். இவர் மொகலாய மன்னர்களை எதிர்த்துப் போர் செய்வதற்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது. எனவே பெரும்பொருளைத் திரட்டுவதற்காகவும், தக்காண பீடபூமியில் இசுலாமியர் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் சிவாஜி கி.பி. 1676இல் தென்னிந்தியாவின் மீது படையெடுத்தார். அவருடைய படை 30,000 குதிரை வீரர்களையும், 20,000 காலாட்படை வீரர்களையும் கொண்டிருந்தது.
பெரும்படையுடன் தமிழகத்தினுள் புகுந்த சிவாஜி பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்தில் இருந்த செஞ்சிக்கோட்டையையும்வேலூர்க் கோட்டையையும் கைப்பற்றினார்.

Tuesday, December 24, 2013

ஒப்பீட்டு அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள்

ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பதுஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை விளக்குவதற்குமான வழிமுறையாகும் என விளக்கமளிக்கப்படுகின்றது. அணுகுமுறையினை வழிமுறை கோட்பாடு என்பதுடன் ஒப்பிடுதவன் மூலமும் மிகவும் நுட்பமாகவும் விளக்கிக் கொள்ளலாம். எனவே அணுகுமுறை என்பது ஒரு வழிமுறை எனக் கூறலாம். வான்டைக் எனும் அறிஞர்அணுகுமுறை என்பது ஓர் பிரச்சினையை தெரிவு செய்கின்ற அலகாகவும் அது தொடர்பான தரவுகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் வழிமுறை என்பது பயனுள்ள தகவல்களைப் பெறுதல் மட்டுமேஎனக் கூறுகின்றார். டேவிட் ஈஸ்ரன்உருவமாதிரிகளே அணுகுமுறைஎனக் குறிப்பிடுகின்றார். சாதாரண மொழியில் கூறுவதாயின் ஓர் குறிப்பிட்ட விடயத்தைப் பார்க்கின்ற முறை, விளக்குகின்ற முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். மறுபக்கத்தில் அறிஞர்கள் தமது கோட்பாடுகளே சிறந்தவை என்பதை முன்வைப்பதற்கான வாதங்களே அணுகுமுறைமைகள் எனலாம். இவ் அணுகுமுறைமைகளை மரபுசார் அணுகுமுறைமை, நவீன அணுகுமுறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம்;.


*வாசகர்கள் இவ்வணுகுமுறைகள் தொடர்பான விடயங்களை அறிவதற்கு முன்பாக எனது ஆசான் கலாநிதி. கிறுஷ்ணமோகன்(B.A.Hons.,M.Phil.,Ph.D.) அவர்களின் வலைத்தளதிற்கு செல்வதன் மூலம் மேலதிகமான அரசியல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் இங்கு அடையாளப்படுத்துகிறேன்.
இதனை சொடுக்குவதன் மூலம் அரசியல் கற்கைகள் தொடர்பான மிகச்சிறந்த பயனுள்ள வலை தளத்திற்கு பிரவேசிக்கலாம்.



1. மரபுசார் அணுகுமுறைமைகள்

மரபுரீதியான அணுகுமுறைமையானது கூடுதலாக விபரணத் தன்மை வாய்ந்ததாகவுள்ளது. மரபுரீதியான அணுகுமுறைமையானது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவோ அன்றி விளக்கம் தருவதாகவோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களின் கருத்துக்களால் இவ் அணுகுமுறைமை வளம்பெற்றிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இது பல சவால்களைச் சந்தித்துள்ளது. மரபுரீதியான அணுகுமுறைகளாக பின்வருவன அடையாளப்படுத்தப்படுகின்றன.அவைகளாவன மெய்யியல் அணுகுமுறைமை, வரலாற்று அணுகுமுறைமை, நிறுவன அணுகுமுறைமை, சட்ட அணுகுமுறைமை என்பவைகளாகும்.

மெய்யியல் அணுகுமுறைமை
மெய்யியல் அணுகுமுறைமை மிகவும் பழைமையானதாகும். ஆரம்ப காலத்தில் இது ஒழுக்கவியல் அணுகுமுறை எனவும் அழைக்கப்பட்டது. மெய்யியல் அணுகுமுறையாளர்களின் கருத்தின் படிமனிதன், அரசு, அரசாங்கம் யாவும் சில இலக்குகள், ஒழுங்குகள், உண்மைகள், உயர் தத்துவங்கள் என்பவைகளோடு மிக நெருங்கிய தொடர்புடையவைகளாகும். அரிஸ்ரோட்டில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், லொக், மொண்டஸ்கியூ, பிளேட்டோ, மோர், ஹரிங்ரன், ரூசோ, கான்ட், ஹெகல், கிறீன் போன்றவர்கள் தமது கருத்துக்களை மெய்யியல் அணுகுமுறைமையின் அடிப்படையிலேயே முன்வைத்துள்ளனர்.

வரலாற்று அணுகுமுறை:
குறிப்பிட்ட காலத்தில் அல்லது கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது சம்பவம் தொடர்பான காட்சிநிலை எவ்வாறு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதே வரலாறாகும். மனிதனின் சிறந்த நடத்தையானது சமூக அபிவிருத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் கற்க வரலாறு பயன்படுத்தப்பட்டது. அரசியல் கோட்பாட்டுக் கல்வியின் பெறுமானத்தினைவரலாற்றுப் பரிமாணத்தின் அடிப்படையில் பலர் ஆய்வு செய்துள்ளனர். ஜீ. எச்;.சபயின், மாக்கியவல்லி, கெட்ரல் போன்றவர்கள் இவ் அணுகுமுறையை ஆதரிக்கின்றனர்.

நிறுவன அணுகுமுறை
நிறுவனங்கள் பொதுவாக அரசியல் நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. அரசியல் நிறுவனங்கள் அரசியல் கட்சிகள், அமுக்கக் குழுக்கள், மாணவர் அமைப்புக்கள் போன்றவகைகள் அரசியல் நிறுவனங்களாக கருத்தப்படுகின்றன. சட்ட, நிர்வாக, நீதி;த்துறைகள் அரசாங்க நிறுவனங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவ்வாறான நிறுவனங்களை ஆராய்வதன் மூலம் அரசறிவியலைக் கற்க முடியும் என்பதால் இவ் அணுகுமுறைகள் முக்கியம் பெறுகின்றன. புராதன காலத்தில் அரிஸ்ரோட்டில், பொலிபியஸ் போன்றோரும் நவீனகாலத்தில் பிறைஸ், பைனர் போன்றோரும்; இவ் அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளனர். சமகால எழுத்தாளர்களாகிய பென்லி, ரூமன், லதம், வி..கீ போன்றவர்கள் இவ் அணுகுமுறைமைக்குள் அமுக்கக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். எப்..ஒக், ஹேர்மன் பைனர், எச்.ஜே.லஸ்கி, எஸ்.எப்.ஸ்ரோங், ஜேம்ஸ் பிரைஸ் போன்றவர்கள் நிறுவன அணுகுமுறைகளை அமைப்பு அணுகுமுறை என அழைக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்கள்.

சட்ட அணுகுமுறை:
அரசு பின்பற்றும் சட்டம், அச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் நீதி, நிர்வாகம் போன்றவற்றை விளக்குவதன் மூலம் குறிப்பிட்ட அரசியல் முறையினை விளக்க இவ் அணுகுமுறை உதவுகின்றது. இவ் அணுகுமுறையினை சிசரோ, டைசி, குறோரியஸ், ஜோன் ஒஸ்ரின் போன்றவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.


2. நவீன அணுகுமுறை:

நவீன அணுகுமுறை மரபு சார் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். மரபு சார் அணுகுமுறையில் பெருமளவு விபரணப் பண்பே காணப்பட்டது. நவீன அணுகுமுறைக்கு நம்பகத் தன்மையான தரவுகள் அவசியமாகும். நம்பகத் தன்மையான தரவுகளைப் பயன்படுத்தியே ஆராட்சி செய்யப்பட வேண்டும். ஆராட்சியானது அனுபவப் பகுப்பாய்வாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆராட்சியின் மூலம் உண்மைகள் வெளிவரும்.நவீன அணுகு முறைக்குள் பல்வேறு அணுகுமுறைமைகள் காணப்படுகின்றன. அவைகளுள்: சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை, புள்ளிவிபர அணுகுமுறை, முறைமைசார் அணுகுமுறை ஒழுங்கமைவு அணுகுமுறை, நடத்தைவாத அணுகுமுறை, மாக்சிச அணுகுமுறை போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிடலாம்.