Saturday, October 18, 2014

பீடை


மனிதனுக்கு அல்லது மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள், பயிரிடப்படும் பயிர்கள்,பொருட்கள் ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பொருளாதாரரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் உயிரிகளே பீடைகளாகும்.
பீடைகள் பிரதானமாக மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தப்படும்.

1. பூச்சிகளும் பூச்சிகளல்லாத விலங்குகளும்.
2. களைகள்
3. நோயாக்கிகள்

பீடை நிலைமை ஏற்படல்

இயற்கைச் சூழற்றொகுதியிலுள்ள விலங்குகளும் தாவரங்களும்; பல்வேறு
இடைத்தொடர்புகள் மூலம் சூழற்றொகுதியின் சமநிலையைப் பேணும். இது இயற்கைச் சமநிலை எனப்படும். இச்சமநிலை பேணப்படுவதற்கு உணவூ, காலநிலை நிலைமை, உயிரிகளிடையே நிகழும் போட்டி, உயிரிகளிடையேயான  இடைத்தொடர்புகள் போன்றன முக்கியமானவையாகும்.
 உயிரிகளிடையே ஒட்டுண்ணியியல்பு, இரைகௌவல், ஒன்றியவாழ்வூ, நோய்வாய்ப்படல் போன்ற இடைத் தொடர்புகள் நிகழும். மேற்படி காரணிகளுள் ஒன்று அல்லது பலவற்றின் தாக்கத்தால் யாதேனும் உயிரியின்
குடித்தொகை அடர்த்தி அதிகரிக்குமானால் அல்லது குறையூமானால் ஏனைய காரணிகளின்
தாக்கத்தால், சிறிது காலத்தின் பின்னர் அது சமநிலையடையூம். இது இயலளவூச் சமநிலை மட்டம்  எனப்படும். விவசாயநடவடிக்கைகளின் போது மேற்படி சூழற் காரணிகள் மாற்றமடைந்தால் சில உயிரிகளின் குடித்தொகை பெருமளவூ அதிகரிப்பதுடன் சிலவற்றின் குடித்தொகை பெருமளவில் குறைந்து போகும். இவ்வாறு அதிகரிக்கும் உயிரிகள் விவசாய நடவடிக்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பீடைகளாகலாம்.

பீடை நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள்

  1. விவசாய நடவடிக்கைகளுக்கென இயற்கைத் தாவரங்களை அழிக்கப்படல். இதனால் இயற்கைச் சூழலில் வாழும் அங்கிகள் அச்சூழலிலிருந்து அற்றுப்போதல்.
  2.  பண்ணையில் உயிரிப் பல்வகைமை குறைவாகையால் இயற்கை எதிரிகள் குறைவடைதல்.
  3. பயிர்செய் நிலங்களில் தனியொரு பயிரை அல்லது தெரிவூசெய்த சில
  4. பயிர்வகைகளை மட்டும் பயிரிடல்.
  5. தொடர்ச்சியாக ஒரே பயிரைப் பயிரிடல்.
  6. பாரம்பரிய பயிர்ச்செய்கையைக் கைவிடல்.
  7. தாவரங்களையூம் விலங்குகளையூம் அகற்றுதல்.


பீடைக் கொள்ளை நிலை

குறுகிய காலப் பகுதியில் குறிப்பிட்ட பீடையின் குடித்தொகையானது பொருளாதாரச் சேத மட்டத்தை விட அதிகரித்து பெருமளவில் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் பீடைக் கொள்ளைநிலை எனப்படும். இந்நிலையில் பீடைக்கட்டுப்பாடு சிரமமாக அமைவதுடன் அதிக செலவூம் ஏற்படும். இந்நிலை ஏற்ப்படுவதற்கான காரணங்கள்
  1. பிறிதொரு சூழலிலுள்ள புதிய ப+ச்சி இனமொன்று புதிய சூழலுக்கு வருதல்.
  2. விகாரம் காரணமாகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூச்சியினங்கள் உருவாதல்.
  3. அதிக பசளைப் பயன்பாடு காரணமாகத் தாவரப் பாகங்கள் சதைப்பற்றடைந்து
  4. மென்மையடைவதனால் அதில் தங்கி வாழும் அங்கிகளின் குடித்தொகை அதிகரித்தல்.
  5. அதிக விளைச்சலைக் கொண்ட பயிர்ப் பேதங்கள் பீடைகளுக்குக் குறைந்தளவில் தாக்குப் பிடித்தல்.
  6. முறையற்ற பீடைநாசினிப் பயன்பாடுஇ தொடர்ச்சியாக ஒரே பூச்சிநாசினியைப் பயன்படுத்தல் ஆகியன காரணமாகப் பூச்சிநாசினிகளுக்கு எதிர்ப்புத் தன்ம கொண்ட பூச்சியினங்கள் உருவாதல்.
  7. பீடைகளுக்குச் சாதகமான சூழல் நிலவூவதனால் அவை அளவூக்கதிகமாகப் பெருகுதல்.
  8. விவசாய இரசாயனப் பொருட்களின் பயன்பாடு காரணமாகக் குறிப்பிட்ட சூழலில் வாழும் பீடைகளின் இரைகௌவிகளும் ஒட்டுண்ணிகளும் அழிவடைவதனால் பூச்சிகள் அதிகம் பெருகுதல்.






நன்றி : தொழினுட்பக் கல்விப் பிரிவூ
விஞ்ஞான,தொழினுட்ப பீடம்
தேசிய கல்வ்வி நிறுவகம்
மகரகம
2013

Wednesday, October 15, 2014

பாடசாலைதிறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம்


முகாமைத்துவம் என்பது ஒருநிறுவனத்தையும் அதன் ஆளணியினரையும் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வதுமாத்திரமன்று அந்நிறுவனங்களுக்குத்  தேவையான பொருத்தமான ஆளணியையும் பௌதிக உள்ளகக் கட்டமைப்பையும் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உச்சவெளியீட்டை அதிகரிப்பது தான் முகாமைத்துவம் ஆகும்.

  • 'வரையறுக்கப்பட்ட வளங்களை  (மனித,பௌதீக) கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ளமுடியும் என எடுத்துக் கூறும் கலை தான் முகாமைத்துவம்  என ஈ.எல்.பிரெச் கூறியுள்ளார். பொதுவாக ஒரு முகாமைத்துவம்  பின்வரும் நான்கு மூலகங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • திட்டமிடல், ஒழுங்கமைப்பு, தலைமைத்துவம் , கட்டுப் படுத்தல்
இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக பாடசாலைகளில் முகாமைத்துவத்தை நிர்வகிக்கின்ற போது அப்பாடசாலைகளின் பெயர் உயர் மட்டத்தை அடைவதை நாம் அவதானிக்க முடியும்.

ஒருநிறுவனத்தின் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகள், அவரின் நடிபங்கு என்பவற்றை பல்வேறு அறிஞர்களும் முகாமைத்துவக் கற்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான கோட்பாடுகள் என்ன கூறுகின்றன? அக்கோட்பாட்டிற்கு இசைவாக நமது பாடசாலை நடைபெறுகின்றதா? பாடசாலையின் முகாமையாளர் அதனைச் சரிவரசெய்கின்றாரா? என நாம் படம் போட்டுப் பார்க்கின்ற போது பாடசாலையின் முகாமைத்துவ நிருவாக அமுல்படுத்தலில் பல காரணங்கள் தடையாக அமைவதை நாம் அவதானிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் தொட்டுச் செல்கின்ற போது அடையாளப்படுத்தவேண்டிய விடயங்களாக சிலவற்றை நாம் நோக்க முடியும்.

வாண்மை விருத்தியில்லாத ஆனால் அனுபவம் வாய்ந்த அதிபர்கள் இதே போன்று அனுபமற்ற வாண்மை விருத்தியுள்ள அதிபர்கள் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் மேற்கூறியவற்றில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாத போது அவர் நிருவாகத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. இதே போன்று அனுபவமும் வாண்மை விருத்தியும் உள்ள ஒரு அதிபருக்கு அரசியல் தலையீடுகள் நிருவாகத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளதையும் நாம் சுட்டிக்காட்டாமல்  இருக்கமுடியாது.

இவ்வாறு பலதலையீடுகளை ஒருமுகாமையாளர் எதிர்நோக்குகின்ற போது ஒரு சிறந்தமுகாமையாளர் என்ற வகையில் அதிபர் இவ் விடயங்களுக்கு அப்பால் தனது போக்கை மாற்றி தனது நிறுவனம் வளர வேண்டுமென்ற கொள்கை அதிபரிடம் இருக்குமானால் அவரால் முடியாதென்ற விடயம்  உடைத்தெறிந்து அப்பாடசாலைகட்டியெழுப்பப்படும்.

அதிபர் Boss என்ற நிலையிலிருந்து விடுபட்டு Executive Officer 
என்ற நிலைக்கு வரவேண்டும். ஏனென்றால் ஒரு பாடசாலை குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களும் வாண்மை விருத்தியுள்ள இளம் ஆசிரியர்களும் இருப்பர். இவர்களின் ஆற்றலையும் அனுபவத்தினையும் அதிபர் பெற முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில் அதிபர் ஒருநிறைவேற்று நிருவாகி என்றவகையில் சில கோட்பாட்டை மையமாக வைத்து முகாமைத்துவத்தை மேற்கொள்கின்ற போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

இதனடிப்படையில் மினிஸ்பேக்கின் நடிபங்குக் கோட்பாடு ரீதியாகபாடசாலை நிருவாகத்தை அமுல் படுத்துகின்ற போது சிறப்பான முகாமைத்துவ நிருவாகத்தை நடைமுறைப்படுத்த முடியும். மினிஸ்பேக் பிரதான மூன்று நடிபாகங்களூடாக பத்து நடிபங்குகளை முன்வைத்துள்ளார்.
பிரதானநடிபங்கு

ஆளிடைத் தொடர்பு நடிபங்கு, தகவல் தொடர்புநடிபங்கு, தீர்மானமெடுத்தல் நடிபங்கு.
பாடசாலையில் அதிபரின் தொழிற்பாடுகளை பிரதானமாக மூன்றுதலைப்பின் கீழ் இனங்காணலாம். தொழிற்பாடுகளைமேலும் விரிவாகஅவர் எடுத்துக் கூறியுள் ளார்.

 1. ஆளிடைத் தொடர்புநடிபங்கு
  •  தலைமைத்தவம்
  •   தலைவர்
  •    இணைப்பாளர்
2. தகவல் தொடர்புநடிபங்கு
  •   கண்காணிப்பாளர்  
  •  தகவல் பரப்புனர்  
  •  பேச்சாளர்
3. தீர்மானம் எடுத்தல் நடிபங்கு
  •  முயற்சியாண்மையாளர்
  •   பிரச்சினையைக் கையாள்பவர்
  • வளஒதுக்கீட்டாளர்
  •   பேசித் தீர்ப்பவர்

Thanks :
       V.Prashanthan 
      Under Graduate  
  Department of Education
 Faculty of Arts and Culture
Eastern University, SriLanka
 075-2354616 / 071-3142200

உளவளத்துணையும் சிக்மண்ட் பிறைட்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையும்


இன்றைய சமூக அமைப்பில் உளவளத் துணை முக்கியத்துவமான ஒரு துறையாகக் காணப்படுகின்றது. இன்று அதிகமானவர்களால் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக உளவளத் துணை என்ற சொல் காணப்படுகின்றது. இயற்கை அனர்தங்கள்இ போர்ச் சூழ்நிலைஇ மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் உளஇ சமூகப் பிரச்சினைகளும் இதன் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

மனித வாழ்க்கையானது முரண்பாடுகள்இ பிரச்சினைகள் ஆகியவற்றோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப் படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள்இ போர் வன்முறைகள்இ தனிமனினுக்கும் சமூகத்திற்கும் இடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகள் போன்றன மனிதனின் உடல்இ உளஇ குடும்ப நலன்களை பெரிதும் பாதிக்கின்றன.

உண்மையில் உளவளத் துணையின் நோக்கம் இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதாகும். இது மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு வழிமுறை ஆகும். குறிப்பாக உணர்ச்சிக் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளித்தல் இதன் நோக்கமாக காணப்படுகின்றது.

பொதுவாக உளவளத்துணை என்னும் போது பிரச்சினைக்கு உட்பட்ட ஒரு நபருக்கு அவரிடமே மறைந்திருக்கும் வளமான திறன் கள்இ பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவருக்கு அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு முறை எனக் கூறலாம். இவ் உளவளத் துணையானது இன்றைய சமூகத்திற்கு ஏன் அவசியமானதாக காணப்படுகின்றது எனப் பார்ப்போமாயின் தனியாக தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றிற்கு தீர்வொன்றை தேடிக் கொள்வதற்கு, தனியாள் ஆளுமையை கட்டி எழுப்புவதற்கு, பிரச்சினைக்குட்படுகின்ற சந்தர்ப் பங்களில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு,மற்றுமொருவருக்கு சொல்ல முடியாத விடயங்களை நம்பிக்கையான ஒருவரிடம் கூறுவதன் மூலம் உள்ளத்தினை அமைதிப்படுத்துவதற்கு, சரியான தீர்மானத்திற்கும் தீர்வுக்கும் வருவதற்கு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

உளவளத்துணை செயற்பாடானது பின்வரும் மூன்று வழிகளில் நடை பெறுகின்றது.
1. தனியாள் உளவளத்துணை
2. குடும்ப உளவளத்துணை
3. குழு உளவளத்துணை

இவ்வாறான உளவளத்துணை முறை களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கு உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட உளவியல் அணுகு முறைகள் பெரிதும் உதவுகின்றன. அவ்வாறான அணுகு முறைகளுள் சிக்மன் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகு முறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

மனித நடத்தைக்கும் உள்ளத்தின் செயற்பாட் டிற்கும் உள்ள தொடர்பினை உளவியலாளர் களும்இ தத்துவவியலாளர்களும் கிரேக்க காலம் முதலே ஆராய்ந்து வந்து இருப்பதனைக் காணலாம். அவர்களுள் முதன்மையான வராக சிக்மண்ட் பிறைட் (ஷிபைசீரnனீ பிசலீரனீ) காணப்படுகின்றார். உளவளத்துணை தொடர்பாக இவரால் முன்வைக் கப்பட்ட அணுகுமுறைதான் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை (ஜிளலணீhழ தியெடலவiணீ திppசழயணீh) ஆகும்.

இவ் அணுகுமுறையின் படி ஒரு நபரின் நடத்தைக்கும்இ செயற்பாட்டிற்கும் உள்ளம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதாகும். குறிப்பாக உளப் பிரச்சினை ஒன்று ஏற்பட்ட பின்னர் உள்ளம் செயற்படும் தன்மையை அடிப்படையாக வைத்து மனிதர்களின் செயற் பாடுகளும் அமைவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது 'உள்ளம்' என்பதாகும். இவ்வாறு மனிதனுடைய நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் உள்ளத்தினை பிறைட் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரித்துள்ளார்.

1. நனவு மனம்
2. நனவடி மனம்
3. நனவிலி மனம்

பிறைட் தனது இறுதிக் காலப் பகுதிகளில் உள்ளத்தின் செயற்பாடுகளை வேறு முறைகளில் விளக்கியுள்ளார். தனது விளக்கத்தில் உள்ளத் தினை மூன்று பகுதிகளாக பிரித்துள்ளார்.
1. இட்
2. ஈகோ
3. சுப்பர் ஈகோ

இங்கு இட் என்பது ஒருவருக்கு பிறப்பிலே கிடைக்கும் ஒரு நிலையாகும். நீண்ட காலமாக ஞாபகத்தில் படிந்துள்ளவைகள் இட் மூலமாக வெளிப்படுவதாக பிறைட் கூறுகிறார். மேலும் யினீ எப்போதும் வாழ்வியல் இயல்பூக்கம்இ மரண இயல்பூக்கம் எனும் இரண்டு இயல்பூக்களின் அடிப்படையில் செயற்படுவதாகும் எனவும் பிறைட் கூறுகின்றார். ஈகோ என்பது ஒருவரது தர்க்க ரீதியில் அமையும் புத்தியாகும். சூழல் மற்றும் யினீ என்பவற்றுக்கிடையே நடைபெறும் முரண்பாடுகளை கட்டுப்படுத்தி உள்ளத்தினை சாதாரண நிலைக்கு கொண்டுவருதல் இதன் செயற்பாடாகும். சுப்பர் ஈகோ என்பது ஒழுக்கம்இ விழு மியம்இ மதம்இ கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் வளரும் ஒன்றாகும். இது யினீ செய்யும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு முனையும்.

இவ்வாறு உள்ளத்தின் செயற்பாடு களை விளக்கிய பிறைட் இவ் அணுகு முறையினூடாக ஆளுமை தொடர்பாக வும் விளக்கி உள்ளார். ஒருவரது ஆளுமையை விளங்கிக் கொள்வதற்கு அவனது உணர்வுகள்இ மனப்பாங்குகள் போன்றவற்றை சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும் என பிறைட் கூறுகின்றார்.

பிறைட்டினால் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை விளக்கப்பட்டிருப்பதனை நாம் காணலாம். இவ் அணுகு முறை யானது உளவளத்துணை செயற்பாட்டி ற்கு அதிகமான பங்களிப்பினைச் செய்கின்றது எனக் கூறினால் அது தவறாகாது. உள ரீதியான பிரச்சினை ஏற்படுகின்ற போது இப்பிரச்சினைகளை ஆராயவும்இ உளவளத்துணை செயற்பாட்டினை இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கும் உதவுகின்றது. பிறைட் தனது கோட்பாட்டின் மூலம் பின்வரும் உளவளத்துணை நுட்பங்களை முன்வைத்திருந்தார்.

1. மனோவசியம்
2. சுயாதீன கூட்டுச் சேர்வு
3. கனவு விளக்கம்

இவற்றின் மூலமாக ஒரு நபரில் மறைந்திருக்கும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதற்கு பிறைட் முன்வந்து இருந்திருந்தார். இந் நுட்பங்களுள் மனோவசிய முறையானது பிற்பட்ட காலங்களில் பிறைட் கைவிட்டபோதிலும் சுயாதீனக் கூட்டுச் சேர்வு மூலம் மறைந்து கிடக்கும் பல அம்சங்களை தேடிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறே கனவு விளக்கமும் முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒரு நபர் காணும் கனவு களை குறியீடாகக் கொண்டு பகுப்பாய்வு செய்து பல அம்சங்களை பெற்றுக்கொள்ள பிறைட் முற்பட்டிருந்திருந்தார்.
இம் மூன்று நுட்பங்களும் உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினைகளை இனம் கண்டு உளவளத் துணை செயற்பாட்டினை இலகுபடுத்த உதவும் என்பதில் ஐயம் இல்லை எனவேதான் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது.