Wednesday, October 15, 2014

பாடசாலைதிறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம்


முகாமைத்துவம் என்பது ஒருநிறுவனத்தையும் அதன் ஆளணியினரையும் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வதுமாத்திரமன்று அந்நிறுவனங்களுக்குத்  தேவையான பொருத்தமான ஆளணியையும் பௌதிக உள்ளகக் கட்டமைப்பையும் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உச்சவெளியீட்டை அதிகரிப்பது தான் முகாமைத்துவம் ஆகும்.

  • 'வரையறுக்கப்பட்ட வளங்களை  (மனித,பௌதீக) கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ளமுடியும் என எடுத்துக் கூறும் கலை தான் முகாமைத்துவம்  என ஈ.எல்.பிரெச் கூறியுள்ளார். பொதுவாக ஒரு முகாமைத்துவம்  பின்வரும் நான்கு மூலகங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • திட்டமிடல், ஒழுங்கமைப்பு, தலைமைத்துவம் , கட்டுப் படுத்தல்
இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக பாடசாலைகளில் முகாமைத்துவத்தை நிர்வகிக்கின்ற போது அப்பாடசாலைகளின் பெயர் உயர் மட்டத்தை அடைவதை நாம் அவதானிக்க முடியும்.

ஒருநிறுவனத்தின் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகள், அவரின் நடிபங்கு என்பவற்றை பல்வேறு அறிஞர்களும் முகாமைத்துவக் கற்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான கோட்பாடுகள் என்ன கூறுகின்றன? அக்கோட்பாட்டிற்கு இசைவாக நமது பாடசாலை நடைபெறுகின்றதா? பாடசாலையின் முகாமையாளர் அதனைச் சரிவரசெய்கின்றாரா? என நாம் படம் போட்டுப் பார்க்கின்ற போது பாடசாலையின் முகாமைத்துவ நிருவாக அமுல்படுத்தலில் பல காரணங்கள் தடையாக அமைவதை நாம் அவதானிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் தொட்டுச் செல்கின்ற போது அடையாளப்படுத்தவேண்டிய விடயங்களாக சிலவற்றை நாம் நோக்க முடியும்.

வாண்மை விருத்தியில்லாத ஆனால் அனுபவம் வாய்ந்த அதிபர்கள் இதே போன்று அனுபமற்ற வாண்மை விருத்தியுள்ள அதிபர்கள் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் மேற்கூறியவற்றில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாத போது அவர் நிருவாகத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. இதே போன்று அனுபவமும் வாண்மை விருத்தியும் உள்ள ஒரு அதிபருக்கு அரசியல் தலையீடுகள் நிருவாகத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளதையும் நாம் சுட்டிக்காட்டாமல்  இருக்கமுடியாது.

இவ்வாறு பலதலையீடுகளை ஒருமுகாமையாளர் எதிர்நோக்குகின்ற போது ஒரு சிறந்தமுகாமையாளர் என்ற வகையில் அதிபர் இவ் விடயங்களுக்கு அப்பால் தனது போக்கை மாற்றி தனது நிறுவனம் வளர வேண்டுமென்ற கொள்கை அதிபரிடம் இருக்குமானால் அவரால் முடியாதென்ற விடயம்  உடைத்தெறிந்து அப்பாடசாலைகட்டியெழுப்பப்படும்.

அதிபர் Boss என்ற நிலையிலிருந்து விடுபட்டு Executive Officer 
என்ற நிலைக்கு வரவேண்டும். ஏனென்றால் ஒரு பாடசாலை குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களும் வாண்மை விருத்தியுள்ள இளம் ஆசிரியர்களும் இருப்பர். இவர்களின் ஆற்றலையும் அனுபவத்தினையும் அதிபர் பெற முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில் அதிபர் ஒருநிறைவேற்று நிருவாகி என்றவகையில் சில கோட்பாட்டை மையமாக வைத்து முகாமைத்துவத்தை மேற்கொள்கின்ற போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

இதனடிப்படையில் மினிஸ்பேக்கின் நடிபங்குக் கோட்பாடு ரீதியாகபாடசாலை நிருவாகத்தை அமுல் படுத்துகின்ற போது சிறப்பான முகாமைத்துவ நிருவாகத்தை நடைமுறைப்படுத்த முடியும். மினிஸ்பேக் பிரதான மூன்று நடிபாகங்களூடாக பத்து நடிபங்குகளை முன்வைத்துள்ளார்.
பிரதானநடிபங்கு

ஆளிடைத் தொடர்பு நடிபங்கு, தகவல் தொடர்புநடிபங்கு, தீர்மானமெடுத்தல் நடிபங்கு.
பாடசாலையில் அதிபரின் தொழிற்பாடுகளை பிரதானமாக மூன்றுதலைப்பின் கீழ் இனங்காணலாம். தொழிற்பாடுகளைமேலும் விரிவாகஅவர் எடுத்துக் கூறியுள் ளார்.

 1. ஆளிடைத் தொடர்புநடிபங்கு
  •  தலைமைத்தவம்
  •   தலைவர்
  •    இணைப்பாளர்
2. தகவல் தொடர்புநடிபங்கு
  •   கண்காணிப்பாளர்  
  •  தகவல் பரப்புனர்  
  •  பேச்சாளர்
3. தீர்மானம் எடுத்தல் நடிபங்கு
  •  முயற்சியாண்மையாளர்
  •   பிரச்சினையைக் கையாள்பவர்
  • வளஒதுக்கீட்டாளர்
  •   பேசித் தீர்ப்பவர்

Thanks :
       V.Prashanthan 
      Under Graduate  
  Department of Education
 Faculty of Arts and Culture
Eastern University, SriLanka
 075-2354616 / 071-3142200

No comments:

Post a Comment