நாடுகாண் பயணங்கள் (ஸ்பானியாவும் போர்த்துக்கல்லும்)

நாடுகாண் பயணங்கள்

ஐரோப்பிய நாடுகாண் பயணமானது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக காணப்படுகிறது. ஸ்பானியா> போர்த்துக்கல் ஆகிய நாடுகளே நாடுகாண் பயணங்களிற்கும்> புது நிலக் கண்டுபிடிப்புகளுக்குமான அடிப்படையினை வழங்கின. ஸ்பானியா> போர்த்துக்கல் ஆகிய நாடுகளே ஆரம்பத்தில் நாடுகாண் பயணங்களில் தலை சிறந்து விளங்கின. எனவே அவற்றின் பங்களிப்பினை ஆராய வேண்டியுள்ளது.

ஐரோப்பிய நாகரீகமானது மத்தியதரைக் கடலோரங்களைச் சார்ந்த பகுதிகளில் ஆரம்பத்தில் நிலைபெற்று பின்னர் படிப்படியாக மேற்கு> மத்தி>வடக்கு தேசங்களிலும் வலுவடைந்து சென்றது. இத்தகு சூழ்நிலை தொடர்ந்து நிலைபெறவில்லை. இஸ்லாமிய பேரரசின் எழுச்சியால் ஐரோப்பாவின் தென் பகுதியில் அதாவது மத்திய தரைக் கடல் பகுதியில் ஐரோப்பியரின் ஆதிக்கம் வலுவிழந்தது. பின்னர் துருக்கியரின் ஆதிக்கம் அதிகரித்ததன் வாயிலாக அரேபியரின் வசமிருந்த ஆசிய> ஆபிரிக்க பகுதிகள் துருக்கியர் வசமானது.

துருக்கியரின் பலம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. அத்துடன் கிழக்கு மேற்கு வர்த்தகத்தில் முதன்மை பெற்றிருந்த கொன்ஸ்தாந்து நோபிள் துறைமுகம் கி.பி 1453இல் துருக்கியர் வசமானது, துருக்கியர் மேலைத்தேய வர்த்தகரின் வர்த்தக நடவடிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதன் காரணமாக வர்த்தகதினை மேற்கொள்வதற்கான புதிய வழிகளைக் கண்டு பிடிக்க ஐரோப்பியர் தலைப்பட்டனர்.

நாடுகாண் பயணங்களை மேற்கொள்வதில் கொன்ஸ்தந்து நோபிள் கைப்பற்றப்பட்டமை> மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புக்கள்> உறுதியற்ற வினியோகம்> கிழக்கு நாடுகளின் பொருட்களை நுகர வேண்டும் என்ற ஆர்வம்> சமயம் பரப்ப வேண்டும்> சிலுவைப் போர்கள்> மறுமலர்ச்சி> இந்தியா>சீனா முதலிய நாடுகளின் செல்வ வளம் பற்றி அறிந்திருந்தமை. முதலிய காரணங்களால் தூண்டப்பட்ட போர்த்துக்கேயர்> ஸ்பானியர்கள் நாடுகாண் பயணங்களை மேற்கொள்ள முடிவு செய்தனர். பிரித்தானிய> பிரான்ஸ் ஆகிய நாடுகளில் போர்> உள்நாட்டு குழப்பம் என்பன ஏற்பட்டிருந்த காரணத்தினால் அவை நாடுகாண் பயணங்களில் ஈடுபடுவதில் பங்கு கொள்ளவில்லை. ஆனால் போர்த்துக்கேய மன்னன் கென்றியின் முயற்சி> ஸ்பானியா ஒற்றுமைப்படித்தப்பட்டு அரசர் பேடினண்ட் அரசி இஸபெல்லா ஆகியோரின் ஊக்கம் என்பன நாடுகாண் பயணங்களினை ஊக்குவித்தன.


நாடுகாண் பயணங்களினை ஊக்குவிப்பதில் போர்த்துக்கேயர் காலம் முதன்மை பெற்றுக் காணப்பட்டது. போர்த்துக்கேய மன்னன் ஆதரவளித்தான். அத்துடன் ஸ்பானியாவும் நாடுகாண் பயணங்களினை மேற்கொள்வதில் பங்கு வகித்தது. நாடுகாண் பயணங்களினை மேற்கொள்வதில் மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புக்கள்> உலகம் உருண்டை என்ற சிந்தனை> திசை காட்டும் கருவி> உலக வரைபடங்கள் ஆகியன உதவின. இதனை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் ஸ்பானியரும் நிலவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டனர்.

போர்த்துக்கேயர் கிழக்கு நோக்கியும் ஸ்பானியர் மேற்கு நோக்கியும் பயணங்களை மேற்கொள்ளத் தலைப்பட்டனர், பல்வேறு நாடுகளினைக் கண்டு பிடித்தனர். இதன் வாயிலாக இவ்விரு நாடுகளிடையில் போட்டி ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யுமாறு ஆறாம் அலெக்ஸாண்டர் போப் பணிக்கப்ப்ட்டார். அவர் 1498இல் ஒரு ஆணை பிறப்பித்தார். அதன்படி  அசோர் தீவுகளிற்கு மேற்கில் ஒரு கற்பனைக்கோடு வரையப்பட்டது. அக்கோட்டின் மேற்குப் பகுதிகள் ஸ்பானியாவிற்கும் கிழக்குப் பகுதிகள் போர்த்துக்கல்லிற்கும் சொந்தமாகும் எனக் குறிப்பிடப்பட்டது. கடல்வழிப் பயணத்தில் செல்வாக்குச் செலுத்திய ஸ்பானியா> போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பங்களிப்பினை தனித்தனியாக நோக்குவது சாலச் சிறந்தது.போர்த்துக்கேயர் 16ஆம் நூற்றாண்டில்  ஆபிரிக்கா> இந்தியா> மற்றும் தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டார்கள், அவர்களின் நாடுகாண் பயண பங்களிப்பினை நோக்குவது அவசியமானதாகும், 

ஐரோப்பாக் கண்டத்தில் தென்மேல் பகுதியில் ஐபீரிய தீவுக்குறையில் உள்ள நாடே போர்த்துக்கல் ஆகும். இங்கு போர்ட்டோ என்ற பெரிய நகரம் உள்ளது. இந் நகரின் வாயிலாகவே போர்த்துக்கல் என்ற பெயர் வந்தது. போர்த்துக்கேயர் நாடுகாண் பயணங்களினை மேற்கொள்வதில் தலைசிறந்து விளங்கினர். நாடுகாண் பயணங்களினால் மேற்கத்தேய செல்வாக்கினை விரிவாக்கி முதன் முதல் உலகப் பேரரசை நிறுவிய நாடு இதுவே. நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக கூடிய காலம்( 600 ஆண்டுகள்) நிலைத்திருந்த பேரரசு இதுவே. போர்த்துக்கேய மன்னன் நாடுகாண் பயணங்களினை ஊக்குவித்தான். மாலுமிகளிற்கு ஆதரவளித்தான். குறிப்பாக தலைசிறந்த மாலுமிகளை தன் தேசத்திலும் இத்தாலியின் குடியரசான ஜெனோவாவிலுமிருந்து வரவழைத்தான். ஜோன் மன்னன் காலத்தில் சூற்றா என்ற கேந்திர நிலையத்தினை போர்த்துக்கேயர் கைப்பற்றினர். இயற்கையாயமைந்த ஜிப்ரோல்டர் கடலினப்பால் அது காணப்பட்டது.

மன்னன் ஜோனின் மகன் இளவரசன் ஹென்றியும் கடல்வழிப் பயணத்திற்கு ஊக்குவிப்பளித்ததுடன் கடல்வழிப் பயணங்களையும் மேற்கொண்டான். இதன் காரணமாக கடலோடி ஹென்றி என அழைக்கப்பட்டான். விஞ்ஞான அறிவின் விருத்தியில் அதிக முக்கியத்துவம் வழங்கினான். தேசபிமானம் காரணமாக நிலம்> பொன் என்பனவற்றினைப் பெறுவதிலும் கவனம் செலுத்தினான். இஸ்லாமிய உலகில் கிறிஸ்தவ சமயமும் பரவ வேண்டும் என்ற உணர்வும் கொண்டிருந்தான். தொலமியின் கருத்தால் ஆட்கொள்ளப்பட்டான். ஆபிரிக்கா மூலமாக வாசனைச் சரக்கிற்கும் ஏனைய விலையுயர்ந்த திரவியங்களிற்கும் பெயர் போன இந்தியாவிற்குச் செல்லலாம் என்பதே அக் கருத்தாகும், இதன் விளைவாக இவனது நாடுகாண் பயண ஆர்வம் வளர்ச்சி பெற்றது,  

ஹென்றி தன் இருப்பிடத்தை சமுத்திரக் கரையோரமாக சென்வின்சன்ட் முனையில் அமைத்துக் கொண்டான்.  கடற்பயண செயற்பாடுகளை பயிற்றுவிக்கும் நிலையத்தினை இந்த முனையில் நிறுவினான் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கி.பி 1419 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் படவரைஞர்கள்> வானியலாளர்கள்> போன்ற பலரும் பணியில் அமர்த்தப்பட்டனர். பூகோளப்படங்கள்> கடல்வழிப்பாதை> போக்குவரத்து திட்டம் பற்றிய படங்கள் என்பவற்றினை சேகரித்துக் கொண்டு ஆய்வுகளை நடாத்தினான். மாலுமிகளை நியமித்து அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துதவி புதிய நாடுகளைக் கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டினான். மேலும் கடற் பயணங்களிலிருந்து திரும்பிய கப்பற் தலைவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டான்.

ஹென்றியின் முயற்சியால் மெடேரியா, அசோர், கானரி முதலிய தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மதீராத் தீவுகளும் இவனால் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி 1455 இல் செனிகல்> காம்பியா> ஆகிய முகத்துவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சென் வின்சன்ட் முனை இவனால் பிரபல்யம் அடைந்தமையானது இவனைத் தொடர்ந்து பத்தலோமிய டயஸ், வாஸ்கொடகாமா போன்றோர் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான அடிப்படையினை வழங்கியது என்று கூறுவதில் ஐயமில்லை. நீண்ட தூர கப்பற் பயணங்களின் நிமிர்த்தம் இவன் திருத்தமான உபகரணங்களைக் கொண்ட பெரிய கப்பல்களைக் கடுவதில் ஊக்கமளித்தான். கி.பி 1460 இல் இவன் இறந்தான். எனினும் இவனது ஊக்கத்தின் பயனாக இவனது மாலுமிகள் கப்பற் பயணங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு நிரட்சரேகை வரை பிரயாணம் செய்துவிட்டனர். இவனது முயற்சியின் பயனாகவே டயஸ் தென் ஆபிரிக்க முனையைக் கடந்து செல்லக் கூடியதாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் நாடுகாண் பயணத்தில்  ஹென்றியின் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்படுகிறது.

ஹென்றியைத் தொடர்ந்து பத்தலோமிய டயஸ் என்ற நாடுகாண் பயணி கப்பற் பயணம் மேற்கொண்டு ஆபிரிக்காவின் தென் கோடி முனையை 1486 இல் அடைந்தார். அவர் புயலால் அடிக்கப்பட்டே அம்முனையை அடைந்தமையினால் அம்முனைக்கு புயல்முனை எனப் பெயரிட்டுத் திரும்பினார். பின்னர் இம்முனையே இந்தியாவிற்கு செல்ல நம்பிக்கை அளித்தமையால் நன்னம்பிக்கை முனை என வழங்கப்பட்டது. இவரது முயற்சியானது இவரின் பின்னர் வந்த வாஸ்கொடகாமாவுக்கு பயணம் மேற்கொள்வதில் வாய்ப்பினை வழங்கியதுடன் இந்தியாவைக் கண்டிபிடிக்கும் முயற்சியையும் அதிகரித்ததென்பது மறைக்க முடியாத உண்மை என்பதன் மூலம் இவரது பங்களிப்பானது அளப்பரியதாக கருதலாம்.

வாஸ்கொடகாமா என்பவர் பத்தலோமிய டயஸைத் தொடர்ந்து கி.பி1497 இல் நான்கு கப்பல்களுடன் போர்த்துக்கல்லிலிருந்து புறப்பட்டு நன்னம்பிக்கை முனையைக் கடந்து இந்து சமுத்திரத்தில் பயணித்து இந்தியாவிற்கு கி.பி1498 இல் சென்றார். இவர் மலையாளக் கரையில் காணப்பட்ட கள்ளிக் கோட்டை என்ற இடத்தினை அடைந்ததன் மூலம் இந்தியாவிற்கு வந்த முதல் போர்த்துக்கேயர் என்ற பெருமையினைப் பெற்றார். இவரது வருகையின் பின்னரே மீண்டும் கீழை நாடுகளின் தொடர்புகளை வலுப்படுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். போர்த்துக்கேய மன்னன் இம்மானுவேல் என்பவர் கடற்பயணம் மேற்கொள்வதற்கு வாஸ்கொடகாமாவிற்கு உதவியளித்தார்.

கி.பி.1500 களில் போர்த்துக்கேய கடலோடி பெடரோ ஆல்வரஸ் கப்ரால் என்பவர் இன்றைய பிறேஸிலைக் கண்டு பிடித்தார். கி.பி1505 இல் லோரன்ஸ்ஸோ டி அல்மெய்டா என்ற போர்த்துக்கேயர் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்தார். இலங்கைக்கு வந்த முதலாவது போர்த்துக்கேயர் இவரே. இவர் போர்த்துக்கேய மாலுமியும்> கடலோடியுமான பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டாவின் மகன் என்பது கூறத்தக்கது. போர்த்துக்கேயர்கள் சிறிது சிறிதாக முன்னேறிக்கொண்டிருந்தார்கள். கி.பி1510 இல் கோவையையும்> கி.பி1511 இல் மலாய் தீபகற்பத்தில் மலாக்காவையும் அதனைத் தொடர்ந்து ஜாவா தீவையும் கி.பி 1516 இல் சீனாவையும் சென்று சேர்ந்தார்கள். இவ்வாறு கிழக்கு நோக்கி பல இடங்களையும் கண்டுபிடித்து தமது வர்த்தகத்தினை விருத்தி செய்தார்கள்.

நாடுகாண் பயணங்களினை மேற்கொள்வதில் ஸ்பானியாவும் எல்லையற்ற பங்களிப்பினைச் செய்துள்ளது. ஐரோப்பாவின் தென் பகுதியில் ஐபீரியத்தீவுக் குறையில் போர்த்துக்கல்லின் அண்மையில் உள்ள நாடே ஸ்பானியா ஆகும். ஐரோப்பாவின் மேற்கிலே இரினிஸ் மலைகளினப்பால் நான்கு இராச்சியங்கள் காணப்பட்டன. அதில் கஸ்டைன்> அரகன் ஆகியன 15 ஆம் நூற்றாண்டில் இது ஒன்றிணைந்த நாடாக உருவாகியது.இதுவே ஸ்பானியா. போர்த்துக்கல்லினைப் போன்று ஸ்பானியாவும் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டியது. இந்த நாட்டின் உருவாக்கத்தில் அரகன் நாட்டின் அரசன் பேடினண்டும்> கஸ்டைன் நாட்டின் அரசி இஸபெல்லாவும் திருமணம் செய்தமையே காரணபாயிற்று. கி.பி1469இல் இவர்களின் திருமணம் இடம்பெற்றது. இவர்கள் அமெரிக்கா என்ற புதிய தேசம் கண்டுபிடிக்கப் படுவதில் முக்கிய பங்கு வகித்தனர். கொலம்பஸ் தனது நாடுகாண் பயணத்தை மேற்கொள்ள காரணமானார்கள்.

கி.பி1451 இல் இத்தாலியின் ஜெனோவாவில் கொலம்பஸ் பிறந்தார். ஆரம்ப காலத்தில் கப்பலில் பணியாற்றினார். போர்த்துக்கேயர் ஆபிரிக்காவினைச் சுற்றி இந்தியாவிற்கு சென்றது போல மேற்குத் திசையாக அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து ஏன் இந்தியா செல்லக் கூடதென கொலம்பஸ் கருதினார். தன் பயணத்திற்கு உதவும் படி போர்த்துக்கல்> பிரித்தானியா> பிரான்ஸ் ஆகிய நாடுகளை நாடினார். பயனில்லை. இறுதியில் ஸ்பானிய நாட்டு மன்னர் பேடினண்டும் அவர் மனைவி இஸபெல்லாவும் உதவி செய்தனர். இவர்களிடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கொலம்பஸ் கண்டு பிடிக்கும் நாடுகள் ஸ்பானியாவிற்கே சொந்தமானது என்பதே அவ்வொப்பந்தமாகும்.

கி.பி1492 ஆகஸ்ட் 03இல் பலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களுடன் கொலம்பஸ் புறப்பட்டார். கி.பி1492 அக்டோபர் 12இல் கரையினை அடைந்தார். அதனை இந்தியா என எண்ணி அங்கு வாழ்ந்தவர்களை செவ்விந்தியர் என அழைத்தார். இவர் ஸ்பானியாவின் முதலாவது குடியேற்ற நாடாகிய ஹிஸ்பனியோலாவிலேயே காலடி வைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. தற்போது கெயிட்டியும்> டொமினிக்கன் குடியரசும் காணப்படும் தீவே இதுவாகும். இவர் கியுபா கெயிட்டி தீவுகளைக் கண்டுபிடித்தார் என்று கூரப்படுகின்றது.

இவர் நான்கு தடவைகள் கடற்பயணங்களை செய்தார். முதல் தடவை பயணித்த வேளை தென்பட்ட நிலத்தினை இந்தியா என நினைத்தார். அங்கிருந்தவர்களை செவ்விந்தியர் என அழைத்தார். அவர் சென்றது பஹாமாஸ் தீவுகளே. இவர் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் இந்த நிலப்பகுதிகள் யாவும் ஸ்பானியாவிற்கே சொந்தமாயின. இவர் மேற்கொண்ட மற்றைய மூன்று பயணங்களில் கரீபியன் கடல்> வெனிசுவெலா> மத்திய அமெரிக்கா ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். நான்காவது பயணத்தில் ஒரினோக்கா நதியை அடைந்தார் என்பதும் கூறத்தக்கது, இவர் கண்டுபிடித்த புதிய தேசம் இந்தியா என்றே கடைசி வரை நம்பினார். கி.பி 1506 இல் வல்லடோலிட் என்ற இடத்தில் மரணமானார்,


அமெரிக்கோவெஸ்புச்சிஎன்றநாடுகாண்பயணி 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார். கி.பி1501 இல் தென் அமெரிக்கா பயணமானார். பிறேசிலின் கடற்கரையை ஆய்வு செய்து நூல்களும் எழுதினார். கொலம்பஸ் கண்டு பிடித்த தேசம் இந்தியா அல்ல என்றும் அது ஒரு புதிய தேசம் என்றும் அறிவித்தார். இவரது நினைவாகவே அத்தேசம் அமெரிக்கா என்ற பெயர் பெறலாயிற்று. பின்னர் கி.பி1513இல் வாஸ்கோர் நூனேஸ்டி பாலபோவா என்பவர் புதிய கண்டமாக கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்காவையும்> தொடர்ந்து கடற்பகுதி இருப்பதையும் கண்டுபிடித்துக் கூறினார். கொலம்பஸ் மறைந்து ஏழு ஆண்டின் பின்னர் அவர் கண்டு பிடித்தது புதிய கண்டம் என வெளிப்படுத்தினார்.

மகலன் என்ற நாடுகாண் பயணி போர்த்துக்கல் அரசனின் சேவகத்தில் இருந்தார். சிறுவயது முதலே மேற்கு நோக்கி பயணம் செய்து நறுமணச் சரக்கினை அள்ளி வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார், போர்த்துக்கல் அரசனிடம் நான்கு தடவை அனுமதி கேட்டும் பயனில்லை. இறுதியாக ஸ்பானிய அரசனான சார்ல்ஸ் உதவியளித்தமையினால்   கி.பி 1519 ஆகஸ்ட் 10இல் விக்டோரியா உட்பட ஐந்து கப்பல்களில் 260 பேருடன் மேற்கு நோக்கி பயணம் மேற்கொள்ளலானார். 10 மாதங்கள் கடந்த நிலையில் அத்திலாந்திக்> பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் தொடுகடலினைக் கண்டுபிடித்தான். இத்தொடுகடல் மகலன் தொடுகடலெனப் பெயர் பெறலாயிற்று.  நீண்ட பயணத்தின் பின் 1521 மார்ச் மாதம் ஒரு தீவுக் கூட்டத்தினை அடைந்தனர். இந்த தீவுக்கூட்டத்திற்கு ஸ்பானிய அரசன் பிலிப் சார்பில் பிலிப்பைன் எனப் பெயரிட்டார், இத்தீவுப்பகுதிகளில் கிறிஸ்தவ சமயத்தினை இவர் பரப்பினார். குறிபாக சேபுத்தீவில் மட்டும் 2200 பேரைக் கிறிஸ்தவராக்கினார். பின்னர் அவர் சின்னத்தீவுக்கு சென்றார். அத்தீவின் அரசன் லப்புலப்புவுடன் பிரச்சனை ஏற்பட்டது. இதில் மகலன் மரணமடைந்தார். இறுதியில் விக்டோரியாக் கப்பலும் 18 பேருமே எஞ்சினர். இவர்கள் 1922 செப்டம்பர் 10 இல்  ஸ்பானியத் துறைமுகத்தினை அடைந்தனர்.

மகலனே முதன் முதலில் உலகை சுற்றி வந்தவர் ஆவார். மகலன் அன்றைய வானியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே பயணத்தை ஆரம்பித்தார். போர்த்துக்கல்லில் கிடத்த முதல் தரமான வரைபடங்களை அவன் பயன்படுத்தினார். ஸ்பானியாவில் பேணி வைக்கப்பட்ட ரகசிய வரைபடங்களும் கடல் கருவிகளும் இவர் பயன்படுத்தினார். இவரது பயண முடிவில் உலகம் உருண்டை என்ற கருத்து சந்தேகமற நிரூபிக்கப்பட்டுள்ளது. இவரது பயணத்திற்காக ஸ்பானிய அரசன் செய்த உதவியானது வரலாற்றில் ஒரு திருப்பு முனையினை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பின்னரே ஏனைய மாலுமிகள் தைரியமாக கடற்பயணத்தினை மேற்கொள்ளலானார்கள்.
மகலன் உலகை சுற்றி வந்து கொண்டிருந்த வேளை கோர்டேஸ் என்பவர் மெக்சிகோ நகர வாயிலினை அடந்தார். ஆஸ்டேகிய சாம்ராஜ்ஜியத்தை அவர் ஸ்பானிய கொடியின் கீழ் கொண்டு வந்தார். கி.பி1530 இல் பிசாரோ என்பவர் தென் அமெரிக்காவிலுள்ள இன்கா சாம்ராஜ்ஜியத்தை அடைந்தார். இவாறாக மேற்கிந்தியத்தீவுகள், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் தீவுகள், தென் அமெரிக்க பிறேஸில் தவிர்ந்த பகுதிகள் என்பன ஸ்பானியர் வசமானதென்பதும் கூறத்தக்கது.

போர்த்துக்கேயர், ஸ்பானியரைத் தொடர்ந்து அவர்களின் பயணங்களை அடியொற்றி இங்கிலாந்து மன்னன் 7ம் ஹென்றியின் உதவியுடன் நியு பவுண்லாண்ட் பகுதியை கண்டு பிடித்தார். கி.பி1534 இல் பிரான்ஸ் நாட்டு ஜாக்ஸ் கார்டியர் கனடாவைக் கண்டுபிடித்தார். கி.பி1642 டாஸ்மன் என்ற டச்சு மாலுமி நியுசிலாந்தையும், டாஸ்மேனியாவையும் கண்டுபிடித்தார். கி.பி1688 இல் டாம்பியர் என்ற ஆங்கிலேய மாலுமி அவுஸ்ரேலியாவைக் கண்டுபிடிதார். இவ்வாறாக பிற நாட்டவர்களும் நாடுகாண் பயணங்களைத் தொடங்குவதற்கு ஸ்பானியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளே காரணமாக இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களின் நாடுகாண் முயற்சியால் புதிய தேசங்கள் பல கண்டுபிடிக்கப்படவும், நாகரிக முன்னேற்றத்திற்கும்> வர்த்தக முன்னேற்றத்திற்கும்> தொழிற்புரட்சி> முதலாளித்துவ சிந்தனைகளுக்கும்> காலணித்துவம் ஏற்படுத்தப்படவும> பூகோள அறிவு விருத்தியடையவும் காரணமாய் அமைந்தது.

போர்த்துக்கேயர், ஸ்பானியரின் புதுநிலத்தேட்டமானது உலக வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே கூற வேண்டும். இதன் விளைவாக சில தீமைகள் ஏற்பட்டிருப்பினும் அதிகளவிலான நன்மைகளையே உலகம் எட்டியது. இவர்களது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவையாக உள்ளன.



Print Friendly and PDF

No comments:

Post a Comment