Monday, April 13, 2015

ஒல்லாந்தர் காலத்தில் இந்தோனேசியாவின் பொருளாதார நிலை


தென்கிழக்காசிய நாடுகளுள் இந்தோனேசியாவும் முதன்மையான நாடாகும். மூவாயிரத்திற்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்டு விளங்கும் இந்நாட்டின் வரலாறு புராதன காலம் முதல் நீண்டு செல்கின்றது. கி.பி 500களில் இந்து, பௌத்த சமய செல்வாக்குகள் இங்கு ஏற்பட்டுக்கொண்டன. பின்பு மாதரம்,  ஸ்ரீவிஜய அரசுகள் எழுச்சி பெற்றன. மத்திய காலத்தில் அராபியரின் வருகையின் பின்பு இஸ்லாமிய சமய செல்வாக்கு இங்கு அதிகரித்துக் கொண்டது. பின்பு ஐரோப்பியரது ஆதிக்கம் ஏற்படலாயிற்று. கிழக்கிந்திய டச்சு வணிகக் குழு வணிகத் தொடர்பால் இந்தோனேசிய தீவுகள் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தோனேசியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே.  தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா G-20 என்ற முக்கிய பொருளாதார அமைப்பின் உறுப்பு நாடாகவூம் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம் வளர்ச்சியினை மேல்வருமாறு நோக்கலாம்.

1513
ஆம் ஆண்டு போர்த்துக்கோயரின் கட்டுப்பாட்டுள் மலாக்கா கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு ஒல்லாந்தர் 17ஆம் நூற்றாண்டில் தமது மேலாதிக்கத்தை இந்தோனேசியாவில் வெளிப்படுத்தினர். இந்தோனேசியாவில் உள்ள ஜாவா, சுமாத்ரா, போர்னியோ, நியூகினி, செலிபஸ் முதலிய தீவுகள்; முதன்மையானவை. ஜாவாப்பகுதியானது வளமான அயனக் கருமண்ணைக் கொண்ட பகுதியாகக் காணப்படுவதனால் பயிர்ச்செய்கைக்கு சாதகமாக காணப்படுகின்றது. தேயிலை, சிங்கோனா, கோப்பி, கரும்பு ஆகியவை புதுப்பயிராக்கல் முறையின்கீழ் ஐரோப்பியரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. காலணித்துவ காலத்தில் அரசின் மேலாண்மைக்கிணங்க குறித்த சில பயிர்களை கட்டாய பயிராக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் காணப்பட்டன. அந்த வகையில் விவசாயிகள் சுயதேவை நிமிர்த்தமும், அரசின் கட்டளை நிமிர்த்தமும் இரு வகையினதாக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் அரசிற்காக செய்கை பண்ணப்படும் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானமானது அரசிற்கே வழங்கப்படவேண்டும் என விதிக்கப்பட்டது. ஒல்லாந்திற்கு ஏற்றுமதி செய்வதன் பொருட்டு இத்தகைய முறையில் உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒல்லாந்தில் வைத்து உற்பத்திப் பொருட்களாக மாற்றப்பட்டு சந்தைகளிற்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் டச்சுக்காரர்கள் இலாபமீட்டினர். இத்தகைய முறைமையானது சுதேசிகளிடமிருந்து நிலவரி பணத்துக்கு பதிலாக பெற்றுக்கொண்ட வருமானமாகக் கொள்ளப்பட்டது.

1830-1860 ஆகிய ஆண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்தில் பெருமளவு இலாபத்தை பெற்றுக்கொடுத்த முறையாக இம்முறை காணப்பட்டது. ஏறத்தாழ 43மில்லியன் பவுன் இக்காலகட்டத்தில் வருமானமாக டச்சுக்காரர்களால் பெறப்பட்டது.
புதுப்பயிராக்க முறைமையானது பிற்பட்ட காலங்களில் விமர்சனத்திற்கு உட்பட்டது. இதன்காரணமாக சேவை வசதிகளை மேம்படுத்தும் எண்ணம் டச்சுக்காரரிடத்து ஏற்பட்டுக்கொண்டது. கல்விஇ மருத்துவம் தொடர்பான பல சலுகைகளை சுதேசிகளிற்கு வழங்கினர். “நியாயக் கொள்கைஒன்றை அறிமுகம் செய்தனர். கட்டாய கொள்முதல் உற்பத்தியின்படி விவசாய மேம்பாடு வளர்ச்சியடைந்தது. அரிசிஇ சர்க்கரை என்பன அதிகம் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் ஏற்றுமதிக்காக புதிய பயிர்களை உற்பத்தி செய்த பகுதிகளில் பஞ்சம், வறுமை ஏற்பட்டுக்கொண்டன. அதேவேளை பிற தீவுகள் கவனம் செலுத்தப்படவில்லை. அதனால் அவை கடற்கொள்ளையர்களது இருப்பிடமாக மாறிக்கொண்டது.
டச்சு குடியேற்ற நாட்டு அமைச்சராக பியூட்டே பணியாற்றிய காலத்தில் (1863-1866) ஆதாயம் குறைந்த பயிர்ச் செய்கைகள் கைவிடப்பட்டன.

மிளகு, இலவங்கம், சாயப்பூச்சு, புகையிலை, சாதிக்காய் முதலான பயிர்கள் இவ்வாறு கைவிடப்பட்டன. ஆனால் கோப்பி, சீனி ஆகிய கட்டாயச் செய்கை முறைகளில் மாற்றம் செய்யவில்லை. விவசாயி ஒருவனின் நிலத்தினுடைய 1/5 பகுதியில் செய்கை பண்ணப்பட்டு வந்த அரசாங்கப் பயிர்ச்செய்கையூம் ஒழிக்கப்பட்டது. 1865ஆம் ஆண்டு கட்டாயக்கூலி முறையும் ஒழிக்கப்பட்டது.

மக்களிற்கான நல்வாழ்வுத்திட்டங்கள் நியாயக் கொள்கைப்படி அமுல்படுத்தப்பட்ட போதும் புதுப்பயிராக்கல் முறைமையானது அதிகாரபூர்வமாக ஒழிக்கப்படவில்லை. இருந்த போதிலும் நாளடைவில் தனியார் அபிவிருத்தி திட்டங்களால் அரசின் கட்டாய விவசாய முறையூம்இ கட்டாய ஏற்றுமதி முறையும் 1870 முதல் மங்கத்தொடங்கின. இதன் விளைவாக தனியார் முதலீடுகளுடனான தனிநபர் விவசாயம் ஆரம்பமானது.
போர்ணியோவில் அருகாமையில் கியூட்டி என்ற இடத்தில் கரிச்சுரங்கங்கள் திறக்கப்பட்டு அதனை 1863களில் டச்சுக்காரர் கைப்பற்றினர். பிலிட்டன் தீவில் தகரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 1851இல் அத்தீவை டச்சுக்காரர் கைப்பற்றிபிலிட்டன் தகரக் கம்பனியைஅங்கு நிறுவினர். இதன் மூலம் டச்சுக்காரர் ஓரளவு வருமானமீட்டினர்.

1870
ஆம் ஆண்டு சீனி வியாபாரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நாளடைவில் யாவாவில் சீனி வியாபாரத்தை யாரும் சுதந்திரமாக நடத்த அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் 1917 ஜனவரி வரை கோப்பி கட்டாயச் செய்கையாக மேற்கொள்ளப்பட்டதையூம் இங்கு அடையாளப்படுத்த வேண்டும். அபின் விற்பனை வரிஇ அடைவூக்கடை வரி முதலிய வரிகள் தொடர்ந்து நடைமுறையில் காணப்பட்டன.  குறிப்பாக 1927ஆம் ஆண்டு வரையில் அபின்இ உப்பு அடைவூ வரிகள் மூலமாக 8 கோடி 26 இலட்சம் கில்டர்கள் வருமானத்தினை டச்சுக்காரர் ஈட்டினர்.

1870
களில் கொண்டு வந்த காணியுரிமைச் சட்டம் மூலமாக தனியார் துறை விருத்தியடந்தது. 1870ஆம் ஆண்டு முதல் இந்தோனேசிய தீவுகள் பொருளாதாரத்தில் சிறப்புறத் தொடங்கின. தனிப்பட்ட விவசாயிகளிடம் அரசாங்க நிலங்களுள் பெரும்பகுதி ஒப்படைக்கப்பட்டன. சீனிச்செய்கை வளர்ச்சி கண்டது. அத்துடன் புகையிலை, கோப்பி செய்கைகளும் உன்னத விருத்தி பெறலாயின. கொப்பறா, தேங்காய் எண்ணெய், கபூக், தேயிலை, கொக்கோ என்பன உலகமெங்கும் ஏற்றுமதி செய்யும் பொருட்களாக இப்பகுதிகளில் விளங்கின. அதே வேளை நூல் நூற்றல், மட்பாண்டம் செய்தல் ஆகிய பண்டைய தொழில்களும் சீர்குலையவில்லை.

1873
ஆம் ஆண்டு சீமாங்- சுரகார்த்தாஇ பத்தேவியா-புயூ+ட்டன் புகையிரத வீதிகள் திறந்து வைக்கப்பட்டன. 1890-1900இற்கு இடைப்பட்ட காலத்தில் 3500 கி.மீ நீளத்திற்கு புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டு வர்த்தகம் விருத்தி செய்யப்பட்டன. அத்துடன் 1866ஆம் ஆண்டு தந்திச் சேவையூம் அறிமுகமானது. 1882ஆம் ஆண்டு முதல் தொலைபேசிக்கம்பி அமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டு அரசாங்கம் தந்திச் சேவையை பொறுப்பேற்றுக் கொண்டது.

பன்னாட்டு வாணிபச் சந்தையாககவும் வாணிப மையமாகவும் இந்தோனேசியா காணப்படுகின்றது. 1850களில் இங்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. கே.பி.எம் என்ற கப்பல் போக்குவரத்து நிறுவனம் சுமாத்ராஇ மேற்கு போர்ணியோ, மகசார், மொலுக்கஸ் ஆகியவற்றை ஜாவாவில் பத்தேவியாவுடன் இணைத்தது. இந்த செயலானது பிற்பட்ட கால உலக வர்த்தகத்தில் இந்தோனேசியா துரித வளர்சியடையக் காரணமாயிற்று

1869
ஆம் ஆண்டு சுயஸ் கால்வாய் திறப்பானது வர்த்தக விருத்தியை துரிதப்படுத்திற்று. சுயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் நீராவிக்கப்பல்களின் பயன்பாடுகள் அதிகரிக்கலாயின. இதனால் துறைமுக விருத்தியூம் ஏற்படலானது. அந்த வகையில் 1893ஆம் ஆண்டு பத்தேவியாவுக்காக தாஞ்சொங் பிறியெக் என்ற இடத்தில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டன. சுரபாயாஇ மக்காசர், எம்மாஹவன் போன்ற இடங்களிலும் துறைமுகங்கள் அமைக்கப்பட்டன.

1870-1900
இற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்றுமதி வர்த்தகம் இருமடங்காகவூம் இறக்குமதி வர்த்தகம் நான்கு மடங்காகவூம் அதிகரித்துக்கொண்டது. இவ்வாறான அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் பசளை, இரும்பு, உருக்கு, யந்திரங்கள், ஆயூதங்கள் உள்ளிட்ட உற்பத்தி ஊக்குவிப்பு பொருட்களின் இறக்குமதி என மதிப்பிடலாம்.
1860
இல் கிறனாப் என்பவர் அமைத்த கிராம நிருவாக சட்டம் மூலமாக கிராமங்களில் விவசாய அபிவிருத்தி ஏற்படவூம்இ கால்நடைகளை பேணவூம்இ கடன்வசதிகளைச் செய்யவூம்இ பொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கிராமங்களுக்கு கிராம சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை என்பதும் கூறத்தக்கது.

தனியார் வர்த்தக முயற்சிகளை அபிவிருத்தி செய்யூம் இலக்குடன் சங்கங்கள் பலவும் தோன்றி சுயாட்சியைப் பெறும் நோக்குடனும் நடந்துகொண்டன. குறிப்பாக 1911ஆம் ஆண்டு தோன்றிய சகோதர இஸ்லாம் என்ற சங்கமானது இந்தோனேசிய வர்த்தக முயற்சிகளை விருத்திசெய்தல், பொருளாதாரத்தில் உதவியளித்தல், இஸ்லாத்தினை நன்னிலையடையச் செய்தல் என பல நோக்கங்களுடன் வளர்ச்சிபெற்று பின்பு சுயாட்சிக்காக போராடியமையைக் கூறலாம்.

1930
ஆம் ஆண்டளவில் நிலவிய மந்தநிலையால் தனியார் துறைகள் சுதேச கைத்தொழில்களிற்கு ஊக்கமளிக்கப்பட்டன. வர்த்தகம், கைத்தொழில் என்பன புத்துயிர் பெறலாயின. இக்காலகட்டத்தில் தன்னிறைவு பெறுதல், சுயாட்சி பெறுதல் என்ற எண்ணங்களும் நிலையூன்றிக்கொண்டன. ஆனால் பெருமளவு ஐரோப்பிய வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். டச்சுக்காரரது மூலதனம் சீனியுற்பத்தியில் தான் அதிகம் காணப்பட்டது. பொருளாதார பெருவீழ்ச்சி இதனைப் பாதித்தது. சீனிச்செய்கை வீழ்ச்சி கண்டது. ஆயினும் சுதேசத்தொழில்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை டச்சுக்காரர் கைவிடவில்லை. இதற்காகநெருக்கடிகால நிலைக்கொள்கைஎன ஒன்றை சகல வழிகளிலும் கடைப்பிடித்தது.
 
20
ஆம் நூற்றாண்டினை எட்டிய வேளை பெரிய றப்பர் தோட்டங்கள் விருத்தி பெறலாயின. சமகாலத்தில் இந்தோனேசியாவின் ஏற்றுமதிப் பொருட்களாக றப்பர், தேயிலை, கோப்பி, கொப்பர், கொய்னா, புகையிலை, சீனி மற்றும் அரிசி என்பன விளங்கின. ஆனாலிப்பொருட்கள் ஒல்லாந்தர் தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவே உற்பத்தி செய்யப்பட்டன. 1905ஆம் ஆண்டு விவசாயத்துறை உருவாக்கப்பட்டு விவசாய அபிவிருத்தி ஏற்பட்டுக்கொண்டது. உற்பத்திக்கான புதிய இடங்களை ஏற்படுத்தும் நீர்ப்பாசன அபிவிருத்தி நவீன விவசாய முறைகள் முதலியவற்றை இத்துறை கவனித்தது. 1938ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தி மற்றும் மக்கள் உற்பத்தி என்பன முறையே 3.5%, 15%ஆகக் காணப்பட்டன. எனவே விவசாய சீர்திருத்தத்திர்கான கூட்டுறவு விவசாய திட்டம்இ விவசாய வங்கிகள்இ கிராம கூட்டுறவு நிருவாகம் ஆகியனவும் எற்படுத்தப்பட்டன. மேலும் குறந்த வட்டிவீதத்தில் விவசாயக் கடன்களும் வழங்கப்பட்டன.

1900
ஆம் ஆண்டில் இந்தோனசியாவில் நடைபெற்ற மொத்த வியாபாரம், வங்கிச் சேவை என்பன டச்சுக்காரர் வசமிருந்தன. சீனர்கள் தரகர்களாகவூம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோராகவும் காணப்பட்டனர். சுதேசிகள் சில்லறை வியாபரம் நடத்தினர். 1905களின் பின் சில மாறுதல்கள் ஏற்படலாயின. அக்காலத்தில் ஒல்லாந்தினரை விடுத்து பிற ஐரோப்பியர்களும் முதலீடுகளை மேற்கொள்ளலாயினர். 1930ஆம் ஆண்டு 7195 ஜப்பானியர்களும், 6867 ஜேர்மனியர்களும், 2000இற்கு மேற்பட்ட பிரித்தானியர்களும் அங்கு குடியேறினர். குறிப்பாக பிரித்தானியா; தேயிலை, இறப்பர், எண்ணெய் தொழில்களில் முதலீடு செய்தனர். 1939இல் அந்நிய மூலதனம் 2875 மில்லியன் பில்டர்களாக காணப்பட்டது. இதில் 75% டச்சுக்காரர்களுக்கும் 13.5% பிரித்தானியர்க்கும் ஏனையவை அமெரிக்கர்களுக்கும் சொந்தமானதாக காணப்பட்டது

அச்செக் என்ற இடம் கைப்பற்றப்பட்ட பின்னர் (டச்சு)  வடகீழ் கரையோரமாயூள்ள எண்ணெய் கிணறுகள் அகழப்படலாயின. 1940களில் சுமாத்ராவில் ஆண்டு தோறும் 50 லட்சம் தொன் மசகு எண்ணெய் பெறப்படலானது. போர்ணியோவில் கனிய எண்ணெய் தொழிலினை டச்சுக்காரர் சமகாலத்தில் ஊக்குவித்தனர். குறிப்பாக சமரிந்தா பகுதி எண்ணெய் உற்பத்தியில் முக்கியம் வகித்தது. 1940-1957 வரையான காலப்பகுதியுள் கனிய எண்ணெய் உற்பத்தி 2 மடங்கினை எட்டிற்று. அகழப்பட்ட கனிய எண்ணெயானது உள்நாட்டு தேவை நிமிர்த்தமே அதிகம் (64.5%) பயன்படுத்தப்பட்டது.

பங்கா, பிலிட்டன் தீவுகளில் சிறந்த தகரச் சுரங்கங்கள் ஏராளமாக தோண்டப்பட்டன. வேலை நிமிர்த்தம் சீனத்தொழிலாளர்கள் இப்பகுதிகளிற்கு செல்லலாயினர். ஆண்டொன்றுக்கு 44000 தொன் தகரக் கனிப்பொருள் கிடைக்கப்பெற்றது. ரியௌத் தீவில் போக்சைட் என்ற அலுமீனிய தாதுப்பொருளும் பெறப்பட்டது. 1938களின் பின்னர் வருடாந்தம் 275000 தொன் அலுமீனியம் எடுக்கப்பட்டது. செலிப்பஸ் தீவில் தங்கம்இ நிக்கல்இ இரும்புஇ எண்ணெய் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

கல்வித்துறை சார் வளர்ச்சியானது பிற்பட்ட காலங்களில் நடுத்தர செல்வந்த வர்க்கத்தின் தோற்றத்திற்கும் கல்விகற்ற வர்க்கத்தின் வருகைக்கும் காரணமாயமைந்ததுடன் பிற்பட்ட கால இந்தோனேசிய பொருளாதாரத்தில் சேவைத்துறை சார் வருமானமீட்டலிற்கான ஆளனியினையூம் கல்வி விருத்தி ஏற்படுத்திற்று எனலாம். பாண்டூங் தொழினுட்பக் கல்லூரி(1919), சட்டக்கல்லூரி(1924), மருத்துவக் கல்லூரி(1926), பத்தேவியா சர்வகலாசாலை(1941) முதலான நிறுவனங்களின் உருவாக்கம் கல்வித்துறை சார் விருத்தியை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய அரசுகளின் குடியேற்றங்களால் தொழினுட்ப விருத்திஇ அறிவியல் மருத்துவ விருத்திகள், விவசாய விருத்தி, செல்வ விருத்தி, வாழ்க்கைத் தர உயர்வு என பலவழிகளிலும் இங்கு விருத்திகள் ஏற்பட்டமையை நிராகரிக்க முடியாது. இன்றைய இந்தோனேசியாவின் கைத்தொழில் விருத்திக்கான முக்கிய காரணமாக டச்சு காலணித்துவாதிhத்தியத்தைக் கூறலாம்.

1960-1997
வரையான காலப்பகுதியூள் சிறப்பான முறையிலும் இன்று ஒப்பீட்டளவில் சற்று தளர்வுற்ற ஆனால் சீரான தன்மையினதாக பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும்பாலும் தொழிற்றுறைமயமாக்கல் மூலமே இந்தோனேசியா விருத்தி கண்டு செல்வதைக் காணலாம். வங்கி முறையினைப் பார்க்கையில் 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சீன, நெதர்லாந்து, பிரித்தானிய பங்குகளே அதிகம் காணப்பட்டன.
இந்தோனேசியாவின் இன்றைய பொருளாதாரத்தை பார்க்கையில் இந்தோனேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளாக நிலக்கரி, எரிவாயூ, பாம் எண்ணெய், கச்சா எண்ணெய், இறப்பர் என்பன காணப்படுகின்றன. அதேபோல் இறக்குமதி ரீதியில் பார்ப்பின் சுத்திகரித்த எண்ணெயினை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. சமகாலத்தில் அரிசிஇ மரவள்ளி, வேர்கடலை, றப்பர், கொக்கோ, கோப்பி, பாம் எண்ணெய், கொப்பரா, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, முட்டை, மூங்கில், ஒட்டுப்பலகை, காடுபடு பொருட்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, புகையிலை, சீமெந்து, பதப்படுத்தப்பட்டஉணவு, நகை முதலிய உற்பத்திகளும், கைத்தொழில்களும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
உலகின் தகர ஏற்றுமதியில் இந்தோனேசியா முன்னிலை நாடாக திகழ்கின்றது. 1980களில் உலகின் தகர உற்பத்தியில் 15% இனை இந்தோனேசியா கொண்டிருந்தது. பக்காத்தீவூஇ சுமாத்ராவின் செல்தன் மாநிலம் தகர உற்பத்திக்கு இன்று பெயர்பெற்ற இடங்களாக காணப்படுகின்றன.

இந்தோனேசியாவானது ஆசிய, மேற்கைரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் நெருங்கிய வர்த்தக உறவுகளை கொண்டுள்ளது. இன்று(2012) ஜப்பான்(15.9%), சீனா (11.4%), சிங்கப்பூர்(9%), தென் கொரியா(7.9%) அமெரிக்கா(7.8%), இந்தியா(6.6%) மலேசியா (5.9%) ஆகிய நாடுகளிற்கே அதிகளவு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. சீனா(15.3%), சிங்கப்பூர்(13.6%), ஜப்பான் (11.9மூ), மலேசியா(6.4மூ), தென் கொரியா(6.2%), அமெரிக்கா (6.1%) ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்கின்றது

கனியஎண்ணெய் வளம் மிக்க நாடாக காணப்பட்ட இந்தோனேசியாவில் ஜாவா, சுமாத்ரா, போர்ணியோ தீவுகளில் எண்ணெய் வளம் காணப்படுகிறது. ஆனால் இன்று கனியஎண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையை அடைந்துவிட்டது. 2008களின் பின் கனிய எண்ணெய் இறக்குமதி நாடாக மாறியுள்ளது. இதனால் ஒபெக் அமைப்பின் அங்கத்துவத்தையும் இந்தோனேசியா இழந்துவிட்டது.
21
ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் விவசாயம் (உணவு, பெருந்தோட்டம், கால்நடை, காடு, மீன்பிடி), சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு, வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, முதலீடுகள் என பலவழிகளாலும் வருமானமானது ஈட்டப்படுகின்றது.
2011
ஆம் ஆண்டு தகவலிற்கிணங்க 74 மில்லியன் தொன் நிலக்கரி இங்கு அகழப்படுகின்றது. அதில் 55மில்லியன் தொன் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1998 ஆம் நூற்றாண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட தங்க அகழ்வின் மதிப்பு 1பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். செம்பு 843 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

உலகின் அலுமீனிய உற்பத்தியில் இன்று 5% அலுமீனியம் இந்தோனேசியாவிலேயே பெறப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய தகரச் சந்தை இங்குள்ளது. செம்பு உற்பத்தியும் கணிசமான அளவில் இடம்பெறுகின்றது. செம்பிற்கு பெயர்போன இந்தோனேசியாவின் இடங்களாக இன்று பகுஹிஜாவு, பியூடோங் என்பன காணப்படுகின்றன. 3 அணு ஆராய்ச்சி மையங்களும் இங்கு காணப்படுகின்றன.

மோட்டார் கைத்தொழிலும் உன்னத வளர்ச்சியடைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு 7.6 மில்லியன் மோட்டார் சைக்கிள்களை இந்தோனேசியா விற்பனை செய்துள்ளது. இதில் கொண்டா(50.95%), யமகா(41.37%) நிறுவனங்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்கள் அனைத்தும் சுதேச உற்பத்திகளாகவே அமைந்துள்ளன என்பதும் கூறத்தக்கது.
ஆடை உற்பத்தியிலும் முக்கியம் பெற்ற நாடாக இந்தோனேசியா உள்ளது. புடவை ஏற்றுமதியில் 2012ஆம் ஆண்டு 13.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இலத்திரனியல் கைத்தொழிலில் ஓரளவு வளர்ச்சியை இந்தோனேசியா எட்டியூள்ளது. குறிப்பாக மின்னுபகரணங்கள் உற்பத்தியில் முக்கியத்துவம் மிக்க நாடாகவுள்ளது.
மொத்த உற்பத்தியில் வேளாண்மை 14.4% ஆகவூம், தொழில் துறை 47% ஆகவும், சேவைத்துறை 38.6% ஆகவும் காணப்படுகிறது.
கிடைக்கப்படும் மொத்த வருமானம் 144.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மொத்த செலவினம் 162.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். வெளிநாட்டினர் முதலீடு 14.81 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இன்று 6 மில்லியன் இந்தோனேசியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் மூலம் வருடாந்தம் 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைக்கப்பெறுகின்றது (2011 கணிப்பீடு).

இயற்கை சனத்தொகை அதிகரிப்பு 6.2% ஆகும். 2012 ஆம் ஆண்டின் தொழிலாளர் ஆளனி 118.1 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் படையில் உள்ள விவசாயிகள் 38.9%, வர்த்தகர்கள் 22.2%, சேவைத்துறையில் 47.9% வேலையற்றௌர் 6.1% ஆகும். வறுமைக் கோட்டின் கீழ் 11.7% மானோர் காணப்படுகின்றனர். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.2%.

1960-1967 வரையான காலப்பகுதியூள் பணவீக்கமானது மிக மோசமான நிலையினை எட்டியது. 1980களின் பின்பு பணவீக்கமானது மந்த நிலையினை அடைந்தது. பின்னா; 1997-1998களில் மோசமான நிலையினை எட்டியது. 2012ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பணவீக்கம் 4.3 ஆக காணப்பட்டது.


No comments:

Post a Comment